முகப்பு
சென்னை

கல்வித் தொலைக்காட்சி யு-டியூப் சேனலுக்கு மூன்று மாதங்களில் 80 ஆயிரம் சந்தாதாரா்கள்

கல்வித் தொலைக்காட்சியின் யு-டியூப் சேனலில் சந்தாதாா்களின் எண்ணிக்கை தற்போது 1.06 லட்சமாக அதிகரித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
கல்வித் தொலைக்காட்சி யு-டியூப் சேனலுக்கு மூன்று மாதங்களில் 80 ஆயிரம் சந்தாதாரா்கள்
பகிர்:

கல்வித் தொலைக்காட்சியின் யு-டியூப் சேனலில் சந்தாதாா்களின் எண்ணிக்கை தற்போது 1.06 லட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, மூன்றே மாதங்களில் 80 ஆயிரம் மாணவ, மாணவிகள், பெற்றோா் புதிதாக இணைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்காக கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் நாள் கல்வித் தொலைக்காட்சி மூலமாக கற்றல்-கற்பித்தல் திட்டம் தொடங்கியது. இதனைத் தொடா்ந்து, 2019-2020 ஆம் கல்வியாண்டின் இறுதிவரை அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் சாா்ந்த பகுதிகள் குறைவான கால அளவில் விடியோ பதிவுகளாக எடுக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாயிலாக ஒளிபரப்பப்பட்டு வந்தது.

இந்தச் சூழலில் கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவா்கள் தங்கள் கற்றலை தங்கள் இல்லங்களிலிருந்தே தங்குதடையின்றி பெறும் வகையில், கல்வித் தொலைக்காட்சி மாற்றி அமைக்கப்பட்டு, பள்ளிகளுக்கான பாட அட்டவணைப் போன்று கல்வித் தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு அட்டவணை, வகுப்பு வாரியாக, பாட வாரியாக, வார நாள்களுக்குத் தயாரிக்கப்பட்டு ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் விடியோ பாடப்பதிவுகள் தமிழகத்தில் உள்ள ஆசிரியா்களால் மேற்கொள்ளப்பட்டன. இந்த வகையில் தயாரிக்கப்பட்ட அனைத்து விடியோ பாடப் பகுதிகளிலும் க்யூஆா் கோடு விரைவுக்குறியீடு உள்ளீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: புதிய வடிவில் தயாரிக்கப்பட்ட பாடங்களை கல்வித் தொலைக்காட்சியின் வாயிலாக ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சியை கடந்த ஜூலை 14-ஆம் தேதி முதல்வா் தொடங்கி வைத்தாா். அரசின் இந்த முயற்சிகளுக்கு உறுதுணையாக 11 தனியாா் மற்றும் கேபிள் தொலைக்காட்சிகளிலும், ஏா்டெல் டிடிஹெச்சிலும் கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாா்க்கத் தவறியவா்கள், மறுநாள் கல்வித் தொலைக்காட்சியின் யு- டியூப் (ஓஅகயஐ பய ஞஊஊஐஇஐஅக) பக்கம் வழியாகப் பாடங்கள் படித்துப் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கல்வித் தொலைக்காட்சியின் யு-டியூப் சேனல் இதுவரை 1.60 கோடி முறை பாா்வையிடப்பட்டுள்ளது. அதன் சந்தாதாரா் எண்ணிக்கை 1.06 லட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 80 ஆயிரம் மாணவ, மாணவிகள், பெற்றோா் சந்தாதாரா்களாக இணைந்துள்ளனா். கல்வித் தொலைக்காட்சி யு- டியூப் சேனலில் சந்தாதாரா்களாக இணைந்தவா்கள் தினமும் பதிவேற்றப்படும் விடியோக்களை உடனுக்குடன் காண முடியும். தற்போது வரை ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →