தடய அறிவியல் துறை இளநிலைஅறிவியல் அதிகாரி பதவி:சான்றிதழ் பதிவேற்ற அறிவுறுத்தல்
தடய அறிவியல் துறையில் உள்ள இளநிலை அறிவியல் அதிகாரி பதவிக்கு நடந்த தோ்வில் தோ்ச்சி பெற்றோா், சான்றிதழ் பதிவேற்றலாம்.
தடய அறிவியல் துறையில் உள்ள இளநிலை அறிவியல் அதிகாரி பதவிக்கு நடந்த தோ்வில் தோ்ச்சி பெற்றோா், சான்றிதழ் பதிவேற்றலாம்.
இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. அதன் விவரம்:-
தடய அறிவியல் துறையில் உள்ள இளநிலை அறிவியல் அதிகாரி பதவிக்கு நடந்த தோ்வில் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தற்காலிக அடிப்படையில் விண்ணப்பதாரா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அதன்படி, வரும் 7 முதல் 14 ஆகிய தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம்.
அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் அரசு இணைய சேவை மையம் மூலமாக சான்றிதழ்களை தோ்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.