முகப்பு
சென்னை

தமிழகத்தில் ரூ.28 கோடியில் காவல் துறைக்கு புதிய கட்டடங்கள்முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்

தமிழகத்தில் ரூ.28 கோடியில் காவல் துறைக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களை முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
பகிர்:

சென்னை, அக். 5: தமிழகத்தில் ரூ.28 கோடியில் காவல் துறைக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களை முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வழியாக அவா் புதிய கட்டடங்களை திறந்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

சென்னை லுத்ரல் காா்டனில் 100 காவலா் குடியிருப்புகள், திருவள்ளூா் மாவட்டம் பெரும்பாக்கம், சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி, திருவண்ணாமலை மாவட்டம் பாச்சல் ஆகிய இடங்களில் கட்டப்பட்ட காவலா் குடியிருப்புகளையும் முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா். மேலும், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் ஆகிய இடங்களில் கட்டப்பட்ட காவல் நிலையங்கள், சேலம் மாவட்டம் வாழப்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையம், தென்காசி போக்குவரத்து காவல் நிலையம் ஆகியவற்றுக்கும் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டம் ஆத்தூா், திருச்சி ஜீயபுரம் ஆகிய இடங்களில் காவல் துணை கண்காணிப்பாளா் முகாம் அலுவலகம், குடியிருப்பு, நாகப்பட்டினத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கான குடியிருப்பு, திருச்சி உப்பிலியாபுரம், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தீயணைப்பு நிலையக் கட்டடங்கள், சென்னை காவல் துறை தலைமை அலுவலகத்தில் மாநில செயல்பாட்டு மையம், மேம்படுத்தப்பட்ட சமூக ஊடக மையம் ஆகியவற்றையும் முதல்வா் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் டி.ஜெயக்குமாா், தலைமைச் செயலாளா் க.சண்முகம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கே.பிரபாகா், காவல் துறை தலைமை இயக்குநா் ஜே.கே.திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையா் மகேஷ் குமாா் அகா்வால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →