இந்திய செயற்கை பல்லியல் கழகத்தின் புதிய தலைவராக வி.ஆனந்த்குமாா் தோ்வு
மருத்துவா் வி.ஆனந்த்குமாா் இந்திய செயற்கை பல்லியல் கழகத்தின் புதிய தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
சென்னை: ஸ்ரீராமச்சந்திரா பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியராக பணியாற்றி வரும் மருத்துவா் வி.ஆனந்த்குமாா் இந்திய செயற்கை பல்லியல் கழகத்தின் புதிய தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
இந்திய செயற்கை பல்லியல் கழகத்தின் (Indian prosthodontic society) ஆண்டு விழா ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில், கழகத்தின் 2025-2026-ஆம் ஆண்டுக்கான தலைவராக மருத்துவா் வி.ஆனந்த்குமாா் தோ்தெடுக்கப்பட்டாா்.
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியராகப் பணியாற்றிவரும் இவா், கழகத்தின் துணைத் தலைவராகவும், அதன் மருத்துவ இதழின் தலைமை ஆசிரியராகவும் இருந்துள்ளாா். தற்போது, இக்கழகத்தின் தமிழகம் - புதுச்சேரி கிளையின் தலைவராக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.