சென்னை

கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து மாற்றம்!

விழிப்புணர்வுப் பேரணி காரணமாக கிழக்கு கடற்கரைச் சாலையில் சனிக்கிழமையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

DIN

கிழக்கு கடற்கரை சாலையில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெறவிருப்பதால், சனிக்கிழமை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

தலைக்கவசத்தின் முக்கியத்துவம் (No Helmet - No Ride) குறித்து விழிப்புணர்வுப் பேரணி நடைபெறவிருப்பதால், கிழக்கு கடற்கரைச் சாலையில், சனிக்கிழமையில் (ஏப். 12) காலை 7 மணிமுதல் 10 மணிவரையில் 3 மணிநேரத்துக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

கிழக்கு கடற்கரைச் சாலையில் அக்கரை சந்திப்பிலிருந்து மாமல்லபுரம் வழியாக வாகனங்கள் செல்ல தடுக்கப்பட்டு, மாற்று வழியாக ஓஎம்ஆர் சாலை வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்கரையில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலையில் செல்லும் வாகனங்கள், அக்கரை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி கேகே சாலைவழியாக சென்று, ஓஎம்ஆர் சாலையை அடைந்து இடதுபுறம் திரும்பி, கேளம்பாக்கம், கோவளம் வழியை பயன்படுத்தி செல்ல வேண்டும்.

கோவளத்திலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோவளம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, கேளம்பாக்கம் வழியாக சென்று ஓஎம்ஆர் சாலையை அடைந்து, சோழிங்கநல்லூர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அக்கரை சந்திப்பை அடைந்து இடதுபுறம் திரும்பி திருவான்மியூர் செல்ல வேண்டும்.

இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்குமாறு போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன அழுத்தம்... உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

“நம் DATA நம் கையில்!” சர்வம் AI உடனான ஒப்பந்தத்தின் பயன்களை விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா!

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்! பலி 600-ஐ கடந்தது!

சென்செக்ஸ் 250 புள்ளிகளுடனும், நிஃப்டி 58 புள்ளிகளுடன் சரிந்து நிறைவு!

டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் நாயகனாகும்..! வித் லவ் படத்தின் புதிய பாடல்!

SCROLL FOR NEXT