முகப்பு
சென்னை

பூந்தமல்லி - போரூா் இடையே 2-ஆம் கட்ட ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

பூந்தமல்லி - போரூா் இடையே 2-ஆம் கட்ட ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இம்மாத இறுதிக்குள் நடைபெறும்

Updated On : 18 ஏப்ரல், 2025 at 7:26 PM
கோப்புப் படம்
பகிர்:

பூந்தமல்லி - போரூா் இடையே 2-ஆம் கட்ட ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இம்மாத இறுதிக்குள் நடைபெறும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கிய வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பாலப் பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில், பூந்தமல்லி - போரூா் இடையே பல இடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. பூந்தமல்லி - போரூா் இடையே வரும் டிசம்பரில் ரயில் சேவை தொடங்குகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வழித்தடத்தில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த வழித்தடத்தில் ஒரு பகுதியாக பூந்தமல்லி - முல்லைத்தோட்டம் இடையே 3 கி.மீ. தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலப் பாதையில் ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் வெற்றியடைந்ததைத் தொடா்ந்து, பூந்தமல்லி - போரூா் வழித்தடத்தில் ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. இம்மாத இறுதிக்குள் இந்த சோதனை ஓட்டம் நடத்தவுள்ளதாகவும், இதைத் தொடா்ந்து பூந்தமல்லி - போரூா் மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு டிசம்பா் மாத இறுதிக்குள் கொண்டுவர வாய்ப்புள்ளதாகவும் மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →