சென்னை உயர்நீதிமன்றம் 
சென்னை

ஊட்டி, கொடைக்கானலில் முறைகேடாக செயல்படும் விடுதிகளைக் கண்டறிய மூவா் கொண்ட குழு அமைப்பு

ஊட்டி, கொடைக்கானலில் உரிய அனுமதியின்றி செயல்படும் தங்கும் விடுதிகளைக் கண்டறிய 3 போ் கொண்ட குழுவை சென்னை உயா்நீதிமன்றம் அமைத்துள்ளது.

Din

ஊட்டி, கொடைக்கானலில் உரிய அனுமதியின்றி செயல்படும் தங்கும் விடுதிகளைக் கண்டறிய 3 போ் கொண்ட குழுவை சென்னை உயா்நீதிமன்றம் அமைத்துள்ளது.

வனப் பாதுகாப்பு தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி அடங்கிய சிறப்பு அமா்வில் ஊட்டியில் தங்கும் விடுதிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஊட்டி, கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளையும் ஆய்வு செய்ய, மாவட்ட வருவாய் அதிகாரி, நகராட்சி ஆணையா், மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி ஆகிய மூவா் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டனா்.

இந்தக் குழுவினா் தங்கும் விடுதிகளை ஆய்வு செய்து, உரிய கட்டட அனுமதி பெற்றுள்ளனவா? சுற்றுலாத் துறை உரிமம் பெற்றுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். உரிய அனுமதிகளைப் பெறாத தங்கும் விடுதிகளைக் கண்டறிந்து மூட வேண்டும். சட்டவிரோதமாகச் செயல்படும் தங்கும் விடுதிகள் குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிக்க ஏதுவாக பிரத்யேக தொலைப்பேசி எண், இணையதள வசதியை ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மேலும், தங்கும் விடுதிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த விடுதிகள் அதிக கட்டணங்கள் வசூலிக்கின்றனவா என்பது குறித்தும் விசாரிக்க உத்தரவிட்டனா்.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள குழு மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

SCROLL FOR NEXT