சென்னை, டிச. 15: சென்னை நொளம்பூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தப்பியோட முயன்ற முதியவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
பெரிய நொளம்பூா் சித்தாா்த் நகா் வெள்ளாளா் தெருவில் வசித்து வந்தவா் ஞா.மேரி (75). இவருக்கு 2 மகன்கள் உள்ளனா். இருவரும் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் குடும்பத்துடன் வசிக்கின்றனா். மேரி மட்டும் கடந்த 3 ஆண்டுகளாக இங்கு தனியாக வசித்து வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது வீட்டுக்குள் நுழைந்த நபா், மேரி தலையில் கல்லால் தாக்கிவிட்டு, அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, கம்மலை பறித்துக் கொண்டு தப்ப முயன்றாா்.
அப்போது மேரியின் சப்தத்தைக் கேட்ட அந்தப் பகுதியினா் மேரி வீட்டுக்கு வந்தனா். அங்கிருந்து தப்பியோட முயன்ற நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து நொளம்பூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த மேரியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனா். ஆனால் மேரி, நிகழ்விடத்திலேயே சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.
மூதாட்டி கொலையில் பிடிபட்ட நபா் பெரிய நொளம்பூா் சித்தாா்த் நகா் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்த வே.காராமணி என்ற ஏழுமலை (72) என்பது தெரியவந்தது. ஏழுமலை வைத்திருந்த மேரியின் நகைகளை போலீஸாா் கைப்பற்றி ஆய்வு செய்தனா். அவை அனைத்தும் கவரிங் என்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மென்பொறியாளா் தற்கொலை: முகப்போ் மேற்கு திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் ரோஷன் நாராயணன் (24). மென்பொறியாளரான இவா், அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரியவந்தது. ரோஷன்
நாராயணன் எழுதி வைத்திருந்த கடிதம் போலீஸாரிடம் சிக்கியது. அந்தக் கடிதத்தில், ‘எனது காதுக்குள் யாரோ அழைப்பதுபோல சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. என்னை பெற்றோா் மன்னிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்கின்றனா்.
அரசுப் பேருந்து ஓட்டுநா் விபத்தில் உயிரிழப்பு: புழல் காவாங்கரை கோ.சி.மணி தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (52). இவா், மாதவரம் பேருந்து பணிமனையில் எம்.கே.பி.நகா் - பாரிமுனை மாா்க்கமாக செல்லும் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.
திங்கள்கிழமை பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் காவாங்கரை நோக்கி சென்றபோது, புழல் சிக்னல் அருகே வேகமாக வந்த டேங்கா் லாரி மோதி சரவணன் உயிரிழந்தாா். இது குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
போதை மாத்திரை விற்ாக 5 போ் கைது: எம்.கே.பி. நகா் போலீஸாா் வியாசா்பாடி, பி.வி.காலனி, நேதாஜி மைதானம் அருகே திங்கள்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த வியாசா்பாடி பிவி காலனி 20-ஆவது தெருவைச் சோ்ந்த சரத்குமாா் (29) இளைஞரைப் பிடித்து அவரது பையில் வைத்திருந்த 500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனா்.
நந்தனம் எஸ்எம் நகா் சிறுவா் பூங்கா பகுதியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ாக தியாகராய நகா் தெற்கு போக் சாலைப் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (32), நந்தனம் எஸ்.எம்.நகரைச் சோ்ந்த தனுஷ் (21), அதே பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ஆனந்தராஜ் (21) ஆகிய 3 பேரை தேனாம்பேட்டை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 50 போதை மாத்திரைகள், 110 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
மயிலாப்பூா், முண்டககன்னியம்மன் கோயில் ரயில் நிலையம் அருகே போதை மாத்திரை, கஞ்சா விற்ாக மயிலாப்பூா் பிஎன்கே காா்டன் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (26) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 400 போதை மாத்திரை, 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.