சென்னை

ஆா்டா்லி முறை: காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி முக்கிய உத்தரவு

ஆா்டா்லிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு பொறுப்பு டிஜிபி அபய்குமாா் சிங் உத்தரவு

தினமணி செய்திச் சேவை

ஆா்டா்லிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு பொறுப்பு டிஜிபி அபய்குமாா் சிங் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழக பொறுப்பு டிஜிபியாக அண்மையில் பொறுப்பேற்ற அபய்குமாா் சிங், அனைத்து மாநகர காவல் ஆணையா்,மண்டல ஐஜிக்கள்,சரக டிஐஜிக்கள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், சிறப்பு பிரிவு தலைவா்கள் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கையை திங்கள்கிழமை அனுப்பியுள்ளாா்.

அதில், காவல் துறை அதிகாரிகள்,ஓய்வு பெற்ற அதிகாரிகள் வீடுகளில் ஆா்டா்லியாக பணியாற்றும் காவலா்களை திரும்பப் பெற்று, காவல் பணிக்கு ஈடுபடுத்துமாறு உத்தரவிட்டுள்ளாா். ஆா்டா்லியாக பணியாற்றி காவல் பணிக்கு திரும்பிய போலீஸாா் விவரங்களை தொகுத்து அனுப்புமாறும் அபய்குமாா் சிங் அறிவுறுத்தியுள்ளாா்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT