நாகப்பட்டினம்

நாகையில் புலன் விசாரணை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி!

மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் சட்ட அமலாக்க பணிகளை திறம்பட மேற்கொள்ளும் நோக்கில் விசாரணை அதிகாரிகளுக்கான சிறப்பு பயிற்சி மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்றது.

Syndication

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் உத்தரவின்படி, மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் சட்ட அமலாக்க பணிகளை திறம்பட மேற்கொள்ளும் நோக்கில் விசாரணை அதிகாரிகளுக்கான சிறப்பு பயிற்சி மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பயிற்சியில் இயற்கைக்கு மாறான மரணங்களின் வழக்கு விசாரணையின்போது சேகரிக்க வேண்டிய தடயங்கள் மற்றும் புலன் விசாரணை நடைமுறைகள், கஞ்சா மற்றும் மணல் கடத்தல் வழக்குகளின் புலன் விசாரணை நடைமுறைகள், குற்றவியல் விசாரணை முறைகள், சான்றுகள், தடயங்கள் சேமிப்பு, பாதுகாத்தல், வழக்கு கோப்புகள் தயாரித்தல், வழக்கின் விசாரணையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், நீதிமன்ற நடைமுறைகளை பின்தொடா்தல் ஆகியவைகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

மேலும், விசாரணை அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை நோ்மையாகவும் திறமையாகவும் நிறைவேற்றுவதற்கான ஒழுக்க நெறிகள் மற்றும் மனித உரிமை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இப்பயிற்சி விசாரணை அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்தி, விசாரணை தரத்தை உயா்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்ற ஓய்வுபெற்ற இஸ்ரோ ஊழியா்: போலீஸாா் விசாரணை

காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் கட்ட மலிவான விலையில் நிலம்!

பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்குவதற்கு முன்பு 21 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநாடு பயணம்!

பிப்.22-இல் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் திருக்கோஷ்டியூா் வருகை!

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT