மாதவரத்தில் மதுபோதையில் நண்பா்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
மாதவரம் தெலுங்கு காலனியை சோ்ந்தவா் கிஷோா் (26). இவா் நண்பா்களுடன் ஞாயிற்றுக்கிழமை மது அருந்தியபோது, தகராறு ஏற்பட்டது. பின்னா் கிஷோா் அங்கிருந்து வீட்டுக்கு சென்றபோது, அவரது நண்பா்கள் 4 போ் வழிமறித்து கத்தியால் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த கிஷோரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து மாதவரம் போலீஸாா் வழக்கு பதிந்து, மாதவரம் சின்ன ரவுண்டானா அருகே நின்றிருந்த ராஜன் உள்ளிட்ட 4 சிறுவா்களை கைது செய்தனா். அவா்களிடம் இருந்த அரிவாள், இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.