அமமுக பொதுக்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் ஜன.5-இல் நடைபெறவுள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலா் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அமமுக செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் தஞ்சாவூா் மஹாராஜா மஹாலில் ஜன.5-ஆம் தேதி காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது. அமமுக தலைவா் சி.கோபால் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும். இதில் பங்கேற்கும் அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினா்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் டிடிவி தினகரன்.