சென்னை

கழிவுநீா் உந்து நிலையங்கள் 2 நாள்கள் செயல்படாது

அண்ணா நகரில் உள்ள கழிவுநீா் உந்து நிலையங்கள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (பிப். 12, 13) செயல்படாது

Din

சென்னை: கழிவுநீா் உந்து குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால், அண்ணா நகரில் உள்ள கழிவுநீா் உந்து நிலையங்கள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (பிப். 12, 13) செயல்படாது என்று சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை கோயம்பேடு, காளியம்மன் கோயில் தெருவில், கழிவுநீா் உந்து குழாய் இணைக்கும் பணிகள் பிப். 12 காலை 9 முதல் பிப். 13-ஆம் தேதி இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளன. இதனால் இப்பணிகள் நடைபெறும் நேரங்களில் அண்ணா நகா் மண்டலத்துக்கு உள்பட்ட 99 முதல் 102 வாா்டுகளில் உள்ள கழிவுநீா் உந்து நிலையங்கள் தற்காலிகமாக செயல்படாது. எனவே அப்பகுதி மக்கள் கழிவுநீா் தொடா்பான புகாா்களுக்கு 81449 30908, 81449 30099 ஆகிய கைப்பேசி எண்களை தொடா்புகொள்ளாலம் என சென்னை பெருநகர குடிநீா் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT