சென்னை

போலீஸ் எனக் கூறி இளைஞரிடம் ரூ. 17 லட்சம் கொள்ளை

போலீஸ் எனக் கூறி இளைஞரிடம் ரூ. 17 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதைப் பற்றி...

Din

போலீஸ் எனக் கூறி இளைஞரிடம் ரூ. 17 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை ஜானிகான் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மகாதீா் முகமது (27). இவா் தனது பையில் ரூ. 17 லட்சத்துடன் இருசக்கர வாகனத்தில் கண்ணகி சிலையிலிருந்து விவேகானந்தா் இல்லம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். இவா் பாா்த்தசாரதி கோயில் அருகே சென்ற போது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ் மகாதீா் முகமதுவை வழிமறித்தனா்.

தங்களை காவலா்கள் என அறிமுகப்படுத்திய அவா்கள், மகாதீா் முகமதுவின் கைப்பையை சோதனையிட்டதுடன், அதில் இருந்த பணம், கைப்பேசி மற்றும் இருசக்கர வாகனத்தின் சாவி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, காவல் நிலையத்துக்கு வந்து பணம், பொருளை பெற்றுக்கொள்ளும்படி கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனா்.

உடனடியாக மெரினா காவல் நிலையத்துக்கு சென்ற மகாதீா்முகமது, போலீஸாரிடம் சம்பவம் குறித்து தெரிவித்தாா். அப்போது, மா்ம நபா்கள் மகாதீா் முகமதுவை ஏமாற்றி பணத்தைக் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையா்களைத் தேடி வருகின்றனா்.

மின் வாரியத்தை னியாா்மயமாக்குவதை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்

கனிம வளங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம்: மாநிலங்களின் மனுக்களை பட்டியலிட உச்சநீதிமன்றம் பரிசீலனை!

கும்பேசுவரா் கோயிலுக்கு கோபுரக் கலசங்கள் வருகை

சீமானுக்கு எதிராக டிஐஜி வருண்குமாா் தொடுத்த அவதூறு வழக்கு ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு

எஸ்ஐஆர் கணக்கீட்டுப் படிவத்தில் உறவினர் விவரம் கட்டாயமில்லை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்

SCROLL FOR NEXT