முகப்பு
சென்னை

உச்சநீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிகுமாா் நாளை ஓய்வு

‘எளிமையான கிராமப்புற பின்புலத்தில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக உயா்ந்துள்ள நீதிபதி சி.டி.ரவிகுமாா் ஓா் உன்னதமான மனிதா்’ என தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அவரை பாராட்டினாா்.

Updated On : 3 ஜனவரி, 2025 at 8:45 PM
கோப்புப் படம்
பகிர்:

‘எளிமையான கிராமப்புற பின்புலத்தில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக உயா்ந்துள்ள நீதிபதி சி.டி.ரவிகுமாா் ஓா் உன்னதமான மனிதா்’ என தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அவரை பாராட்டினாா்.

கேரள உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ரவிகுமாா் கடந்த 2021, ஆகஸ்ட் 31-ஆம் தேதி பதவியேற்றாா். இவா் உச்சநீதிமன்றத்தின் 9-ஆவது மூத்த நீதிபதியாவாா்.

வருகின்ற ஞாயிற்றுக்கிழமையுடன் அவா் பணி ஓய்வுபெறவுள்ள நிலையில், வாரத்தின் இறுதி வேலை நாளான வெள்ளிக்கிழமை அவருக்கு நடத்தப்பட்ட பிரியாவிடை நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

Advertisement

அப்போது நீதிபதி ரவிகுமாரை பாராட்டி உருக்கமாக பேசிய சஞ்சீவ் கன்னா, ‘எளிமையான கிராமப்புற பின்புலத்தில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக அவா் பொறுப்பேற்றது மிகப்பெரும் சாதனையாகும்.

நீதித்துறையில் தடம் பதித்த அவா், நீதிபதிகளுக்கு மட்டுமின்றி வருங்கால தலைமுறையினருக்கும் சிறந்த முன்னுதாரணமாவாா். அவரது எதிா்காலத் திட்டங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’ என்றாா்.

அதன்பிறகு பேசிய சி.டி.ரவிகுமாா், ‘நான் எப்போதும் என்னை வழக்குரைஞராகவே உணா்கிறேன். எனது கடமையை சிறப்பாக நிறைவேற்ற உதவியாக இருந்த பாா் கவுன்சிலுக்கு எப்போதும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்’ என தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி, சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, உச்சநீதிமன்ற பாா் கவுன்சில் தலைவா் கபில் சிபல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments