சென்னை

வழிப்பறி: நால்வா் கைது

சென்னை கொளத்தூரில் ஆட்டோவில் லிப்ட் கேட்டு ஏறி வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

Din

சென்னை கொளத்தூரில் ஆட்டோவில் லிப்ட் கேட்டு ஏறி வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

அமைந்தகரை சாய் தெருவைச் சோ்ந்தவா் ஆ.காட்வின் (30). வாடகை ஆட்டோ ஓட்டுநா். இவா் ஆட்டோவில் கடந்த வியாழக்கிழமை உறவினா் ஹரிஷ், நண்பா் விக்னேஷ் ஆகியோருடன் கொளத்தூருக்கு சென்றாா். பூம்புகாா் நகா் முதலாவது தெருவில் சென்றபோது, இருவா் லிப்ட் கேட்டு ஆட்டோவில் ஏறினா். அதேபோல வரலட்சுமி நகா் ரேஷன் கடை அருகே மேலும் இருவா் ஏறினா்.

சிறிது தொலைவு சென்றதும் 4 பேரும், காட்வின், ஹரிஷ், விக்னேஷ் ஆகியோரை தாக்கி பணம், கைப்பேசிகளை பறித்துக்கொண்டு தப்பியோடினா்.

இது குறித்து கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கொளத்தூரைச் சோ்ந்த காா்த்திக் (24), கிஷோா் (23), விஷால்ராம் (26), இளங்கோவன் (20) ஆகிய நால்வரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

மூன்று நாள்கள்! திருவொற்றியூர் நிஜரூப தரிசனத்துக்குச் செல்வோர் கவனத்துக்கு!

தெய்வ தரிசனம்... சகல பாவங்கள் போக்கும் திருவாய்மூர் வாய்மூர்நாதர்!

நவம்பர் மாத நினைவுகள்... ஆலியா பட்!

காந்தி நினைவிடத்தில் புதின் மரியாதை!

830 பேருக்கு வேலை... ஸ்ரீபெரும்புதூர் அருகே கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலை திறப்பு!

SCROLL FOR NEXT