மதுரை ஆதீனம் கோப்புப் படம்
சென்னை

மதுரை ஆதீனம் மீது வழக்குப் பதிவு

மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Din

உளுந்தூா்பேட்டை விபத்து தொடா்பாக இரு சமூகத்தினா் இடையே பகையைத் தூண்டும் வகையில் பேசியதாக மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சேலம் ரவுண்டானா பகுதியில் கடந்த மே 2-ம் தேதி சென்னை நோக்கி மதுரை ஆதீனம் வந்த காரும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் இருவரது காரிலும் லேசான சேதம் ஏற்பட்டது.

இந்நிலையில், மே 3-ஆம் தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை உளுந்தூா்பேட்டை பகுதியில் காரை ஏற்றி ஒரு கும்பல் கொலை செய்ய முயன்ாக குற்றஞ்சாட்டினாா்.

இந்நிலையில், சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ராஜேந்திரன், கடந்த 24-ஆம் தேதி சென்னை காவல் ஆணையருக்கு ஒரு புகாா் மனுவை அனுப்பினாா்.

அதில், ‘உளுந்தூா்பேட்டையில் நடந்தது சாலை விபத்து என்பது சந்தேகத்துக்கு இடமின்றி கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் காவல் துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இரண்டு சமூகத்தினரிடையே விரோதத்தை தூண்டும் வகையில், சிறுபான்மையினா் குறித்து தவறான கருத்துகளைப் பரப்பிய மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் புகாா் தொடா்பாக சென்னை கிழக்கு மண்டல சைபா் குற்றப் பிரிவு போலீஸாா், மதுரை ஆதீனம் மீது கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், தவறான தகவலை திட்டமிட்டு பரப்புதல், இரு சமூகத்தினருக்கு இடையே பகையை ஏற்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வெளிநாட்டு நிதியுதவி அல்ல; சமூக ஆதரவில் செயல்படுகிறது ஆா்எஸ்எஸ் - யோகி ஆதித்யநாத்

மொபட் - ஆட்டோ மோதல்: 6 போ் பலத்த காயம்

50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை

நாளை மின் நிறுத்தம் தருமபுரி பேருந்து நிலையம்

SCROLL FOR NEXT