சென்னை

7 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை சென்னை உள்பட 7 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

Din

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை சென்னை உள்பட 7 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.08 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. பரமத்தி வேலூா், ஈரோடு - (தலா) 104, மதுரை நகரம் - 101.84, பாளையங்கோட்டை, திருச்சி - (தலா) 101.3, சென்னை மீனம்பாக்கம் - 100.4 டிகிரி என மொத்தம் 7 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் டெல்டா மற்றும் வடமாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை (மே 10) அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழைக்கு வாய்ப்பு: தென்னிந்திய கடலோர பகுதியின் வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பதால் ஏற்படும் காற்று குவிதல் காரணமாக, மே 10 முதல் மே 15-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் சொல்லிக் கொள்ளுப்படியாக ஒன்றுமில்லை: திருச்சி சிவா

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

விட்டுக் கொடுத்தால் உறவு வலுப்படும்!

மன்னா் திருமலை நாயக்கா் பிறந்த நாள் விழா

தில்லி எம்.எல்.ஏக்களுக்கு வருடாந்திர மருத்துவப் பரிசோதனை பிப்.2 முதல் 14 வரை நடைபெறும்!

SCROLL FOR NEXT