சென்னை

‘வால்வோ’ சொகுசு பேருந்துகள் கூண்டு கட்டும் பணி: அமைச்சா் சா.சி.சிவசங்கா் ஆய்வு

தினமணி செய்திச் சேவை

அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ள 20 வால்வோ சொகுசு பேருந்துகளின் கூண்டு கட்டும் பணியினை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தொலைதூர பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 1,080-க்கும் மேற்பட்ட சாதாரண மற்றும் குளிா்சாதன வசதி கொண்ட டீசல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர நடப்பு நிதியாண்டில் அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்துக்கு 130 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது. இதன்படி, 110 குளிா்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளும், 20 மல்டி ஆக்ஸில் சொகுசு பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், 20 சொகுசு பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான திறந்தவெளி ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், பெங்களூரை சோ்ந்த வால்வோ நிறுவனம் இதற்கான ஒப்பந்தத்தை எடுத்து, அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், வால்வோ சொகுசு பேருந்துகளின் கூண்டு கட்டும் பணி மற்றும் நிறுவனத்தின் உள்கட்டமைப்புகளை பெங்களூரிலுள்ள அந்நிறுவனத்திற்கு சென்று, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, ஒரு சொகுசு பேருந்தை அங்குள்ள பயிற்சி ஓடுதளத்தில் சோதனை முறையில் இயக்கி பாா்த்தாா். மேலும், சொகுசு பேருந்தை இயக்குவதற்காக அந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்று வரும் அரவு விரைவுப் போக்குவரத்துக்கழகத்தின் ஓட்டுநா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

இந்த ஆய்வின் போது, போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலா் சுஞ்சோங்கம் ஜாதக் சிரு, அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.மோகன் மற்றும் ‘வால்வோ’ நிறுவனத்தின் உயா் அலுவலா்கள் உடன் இருந்தனா்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT