சென்னை

தீபாவளி பட்டாசு வெடிப்பு: வளசரவாக்கத்தில் காற்று மாசு அதிகரிப்பு

தீபாவளியின்போது, பட்டாசு வெடிப்பால் வளசரவாக்கத்தில் அதிக அளவில் காற்று மாசடைந்ததாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

Chennai

சென்னை: தீபாவளியின்போது, பட்டாசு வெடிப்பால் வளசரவாக்கத்தில் அதிக அளவில் காற்று மாசடைந்ததாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாசுக் கட்டுப்பாட்டு குழுமங்கள் மேற்கொள்ளக்கூடிய முக்கிய நகரங்களில் குறுகிய கால கண்காணிப்பாக 15 நாள்களுக்கு (அதாவது தீபாவளிக்கு 7 நாள்களுக்கு முன்பாகவும், தீபாவளி நாள், தீபாவளிக்கு 7 நாள்களுக்கு பின்பாகவும்) முக்கிய காற்று மாசு காரணிகளின் அளவுகளைக் கண்காணிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, தமிழக அரசு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உத்தரவின்படி, கடந்த ஆண்டைப் போலவே பசுமைப் பட்டாசுகளை வெடிக்கும் நேரத்தை கடந்த திங்கள்கிழமை (அக். 20) காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டது.

தீபாவளியின்போது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுப்புற காற்றின் மாசு தர அளவையும் மற்றும் ஒலி மாசு அளவையும் கண்டறிய கண்காணிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியில் காற்றுத் தர குறியீட்டு அளவு குறைந்தபட்சமாக பெசன்ட் நகா் 190, அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 332 வரை இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.

ஒலி தரக் குறியீட்டு அளவு குறைந்தபட்சமாக பெசன்ட் நகரிலும், அதிகப்பட்சமாக திருவொற்றியூரிலும் கண்டறியப்பட்டன.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT