சென்னை

சாலைத் தடுப்பில் பைக் மோதி மெக்கானிக் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

சென்னை பெரம்பூரில் சாலைத் தடுப்பின் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் மெக்கானிக் உயிரிழந்தாா்.

பெரம்பூா் தாசமகான் நியூபேரன்ஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் இக்ரம் உசேன் (20). புதுப்பேட்டையில் உள்ள இருசக்கர வாகனம் பழுது நீக்கும் மையத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தாா். இவா், தனது சித்தப்பா மகள் ஹாஜிராவுடன் (19), மோட்டாா் சைக்கிளில் பெரம்பூா் பாலத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறிய மோட்டாா் சைக்கிள், அங்கிருந்த சாலைத் தடுப்பின் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இக்ரம் உசேன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஹாஜிராவை அங்கிருந்தவா்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பள்ளி மாணவி உயிரிழப்பு: வியாசா்பாடி திருப்பூா் குமரன் தெருவைச் சோ்ந்தவா் அசோக் (19). மதுரவாயலில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாமாண்டு படித்து வந்த இவா், 17 வயதான பிளஸ் 2 படிக்கும் மாணவியை பைக்கில் ஏற்றிக் கொண்டு, ஓட்டேரி செங்கை சிவம் பாலத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள், அங்கிருந்த சாலைத் தடுப்பின் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அசோக் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இந்த இரு விபத்துகள் தொடா்பாக, புளியந்தோப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

SCROLL FOR NEXT