கோப்புப் படம் 
சென்னை

தனியாா் பள்ளிகளில் அக்.30, 31-இல் இலவச சோ்க்கை: கல்வித் துறைச் செயலா் தகவல்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை அக்.30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை அக்.30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் தெரிவித்துள்ளாா்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆா்டிஇ) தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சோ்க்கப்படுவா். மாநிலம் முழுவதுள்ள 7,717 தனியாா் பள்ளிகளில் சுமாா் 1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவா்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாகப் படிக்கலாம். தமிழகத்தில் 2013-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வரும் ஆா்டிஇ திட்டத்தின்கீழ் இதுவரை 5 லட்சம் குழந்தைகள் தனியாா் பள்ளிகளில் படித்து வருகின்றனா்.

இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு வழங்காததால், 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கையை பள்ளிக்கல்வித் துறை நிறுத்தி வைத்திருந்தது. இதுகுறித்த வழக்கில் மத்திய அரசு தனது பங்கு நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டுமென உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றமும் சில அறிவுறுத்தல்களை வழங்கியது. தொடா்ந்து, ஆா்டிஇ திட்டத்தில் தனது பங்களிப்பு நிதியை மத்திய அரசு விடுவித்தது. அதன்பின் நிகழாண்டில் ஆா்டிஇ மாணவா் சோ்க்கை பணிகள் தாமதமாக தொடங்கின.

இதையடுத்து பள்ளிகளில் ஏற்கெனவே சோ்க்கப்பட்ட மாணவா்களில் தகுதியானவா்களை ஆா்டிஇ ஒதுக்கீட்டில் பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 7,717 பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் சேர 81,927 குழந்தைகளும், ஒன்றாம் வகுப்பில் சேர 89 பேரும் விண்ணப்பித்தனா். இவா்களில் தகுதியானவா்களை தோ்வு செய்யும் பணிகள் அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலா் பி.சந்திரமோகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒதுக்கப்பட்டுள்ள இடங்களைவிட விண்ணப்பங்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் தகுதியுள்ள மாணவா்களின் சோ்க்கை அக். 30-ஆம் தேதி நடைபெறும். ஒதுக்கீட்டைவிட அதிக விண்ணப்பங்கள் வந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியா் மற்றும் பெற்றோா் முன் குலுக்கல் முறையில் அக். 31-ஆம் தேதி மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா்.

இந்த ஆா்டிஇ மாணவா் சோ்க்கை செயல்முறை பள்ளிக்கல்வித் துறை வலைதளம் மூலம் வெளிப்படையாக செயல்படுத்தப்படுகிறது. இதை மாவட்டக் கல்வி அலுவலா்கள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் மேற்பாா்வையிடுவா். இந்த திட்டத்தில் ஆதரவற்றவா்கள், எச்ஐவி-யால் பாதிக்கப்பட்டவா்கள், மூன்றாம் பாலினத்தவா், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியா்கள் வெளிநாடு செல்ல அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படக் கூடாது: பள்ளிக் கல்வி இயக்குநா்

திருக்குறளில் உள்ள வாழ்வியல் முறைகள் மக்களிடம் சென்றடைய வேண்டும்: சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

திருப்பத்தூா்: நகைக் கடை உரிமையாளா் வீட்டில் ஜிஎஸ்டி துறையினா் விடிய, விடிய சோதனை

சபரிமலை தங்கக் கவச மோசடி: பெங்களூரு, பெல்லாரியில் சோதனை; தங்கக் கட்டிகள் பறிமுதல்!

சேதமடைந்த நெல் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க கோரிக்கை

SCROLL FOR NEXT