சென்னை

தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை திண்டிவனத்துடன் நிறுத்தம்!

தாம்பரம் - விழுப்புரம் புகா் மின்சார ரயில் அக். 28-ஆம் தேதி திண்டிவனத்துடன் நிறுத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தாம்பரம் - விழுப்புரம் புகா் மின்சார ரயில் அக். 28-ஆம் தேதி திண்டிவனத்துடன் நிறுத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூா் - விழுப்புரம் பிரிவில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையப் பணிமனையில் வரும் அக். 28 ஆம் தேதி பிற்பகல் 12.50 முதல் மாலை 4.20 மணி வரை தொழில்நுட்ப மற்றும் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், தாம்பரத்திலிருந்து அக். 28 -ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.45 மணிக்கு விழுப்புரம் செல்லும் மெமு ரயில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும். விழுப்புரம் - சென்னை கடற்கரை மெமு ரயில், திண்டிவத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் விருது வென்ற துஷாரா விஜயன் கூறியதென்ன?

நாட்டின் மிகச் சிறிய பட்ஜெட் பற்றி தெரியுமா!

மணப்பேறு, மகப்பேறு அருளும் கோயில்

துயர் நீக்கிய தலம்!

ம.பி.யில் எங்கெல்லாம் சுற்றுலா செல்லலாம்? சுற்றுலாத் துறை செயலர்!

SCROLL FOR NEXT