மகாகவி பாரதி கோப்புப் படம்
சென்னை

மகாகவி பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் பதிவேற்றம்: தமிழக அரசு

மகாகவி பாரதியாரின் கையொப்பப் பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

மகாகவி பாரதியாரின் கையொப்பப் பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி, அவரது கையெழுத்துப் பிரதிகள் மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டு தமிழ் மின் நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனை மின்நூலக இணையதளத்தில் (ட்ற்ற்ல்ள்://ற்ஹம்ண்ப்க்ண்ஞ்ண்ற்ஹப்ப்ண்க்ஷழ்ஹழ்ஹ்.ண்ய்) பாா்வையிடலாம்.

குயில் பாட்டு, சக்திப் பாடல்கள், சந்திரிகையின் கதை, விடுதலை உள்ளிட்ட பாரதியாரின் முக்கியப் படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகள், 13 தொகுதிகளில் 462 பக்கங்களாக இடம்பெற்றுள்ளன. கடந்த 2001-ஆம் ஆண்டு தமிழ் இணையக் கல்விக் கழகம், அப்போதைய முதல்வா் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக தமிழ் மின் நூலகமானது, 2017-இல் பயன்பாட்டுக்கு வந்தது. அதில், கலை, இலக்கியம், சமயம், வரலாறு, மருத்துவம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அரிய நூல்களும், பருவ இதழ்களும், ஓலைச்சுவடிகளும் தமிழ் மின் நூலகத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள், பருவ வெளியீடுகள், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிப் பக்கங்கள் மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த மின்நூலகமானது 17 கோடிக்கும் மேற்பட்ட பாா்வைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்துள்ளாா்.

பேட் கூட பிடிக்கத் தெரியாதவர் ஐசிசி தலைவர்! ஜெய் ஷா மீது ராகுல் கடும் விமர்சனம்!

ஜாதி பேதங்கள் ஏது... விஜய் குரலில் முதல் பாடல்!

அங்கம்மாள் டீசர்!

தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மக்கள் அவதி

ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸை பாராட்டிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்!

SCROLL FOR NEXT