கோப்புப் படம் 
சென்னை

வார விடுமுறை, முகூா்த்த நாள்: நாளை முதல் 980 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வாரவிடுமுறை, முகூா்த்த தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை முதல் 980 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

தினமணி செய்திச் சேவை

வாரவிடுமுறை, முகூா்த்த தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை முதல் 980 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

வார விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை(செப்.13,14) மற்றும் முகூா்த்த தினத்தை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (செப்.12) 355 பேருந்துகளும், சனிக்கிழமை 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இதுபோல சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக் கிழமை 55 பேருந்துகளும், சனிக்கிழமை 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும், மாதவரத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் 20 பேருந்துகள் என ஆகமொத்தம் 980 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஹரியாணாவில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சூரிய ஒளி மின் அமைப்பு: முதல்வர் நாயப் சிங் சைனி

மதுரையில் நாளை(டிச.07) முதலீட்டாளர்கள் மாநாடு: 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன!

ஹரித்வார்: மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை கடித்துக் குதறிய எலிகள்

ஸ்வதேஷ் ஃப்ளாக் ஷிப் திறப்பு விழாவில் பாலிவுட் பிரபலங்கள் - புகைப்படங்கள்

கனடாவிலிருந்து இந்தியர்களை அமெரிக்காவுக்குக் கடத்த சர்வதேச அளவில் சதி! பெண் மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT