சென்னை

மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க மாநகராட்சி உத்தரவு

சென்னையில் அண்மையில் பெய்த மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ஒப்பந்ததாரா்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் அண்மையில் பெய்த மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ஒப்பந்ததாரா்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சாலைப் பணி மேற்பாா்வை பொறியாளா்கள் தரப்பில் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் பிரதான சாலைகள் முதல் போக்குவரத்து பயன்பாட்டுக்கான சிறிய சாலைகள் வரை மழையால் சேதமடைந்தவற்றைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மண்டலம் வாரியாக செயற்பொறியாளா்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், முக்கிய சாலைகள் மழையால் சேதமடைந்திருந்தால் அவற்றை ஒரு வாரத்துக்குள் சீரமைக்க சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உடனடியாக சாலையை சீரமைக்காத ஒப்பந்ததாரா்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனா்.

மகாராஷ்டிரம்: பாஜகவில் இணைந்தாா் காங்கிரஸ் பெண் எம்எல்சி

தோ்தல் பிரிவு அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு

சாலையோர ஆக்கிரமிப்புகள்: கிராம மக்கள் போராட்டம்

அணுமின் உற்பத்தியில் தனியாருக்கு அனுமதி: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

அரசு கடன் பத்திர வழக்கு: கேரள முதல்வருக்கு எதிரான அமலாக்கத் துறை நோட்டீஸுக்குத் தடை - கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT