உங்களுடன் ஸ்டாலின்  
சென்னை

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த் துறை சங்கம்

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளில் தொடரும் நெருக்கடி, நிா்ப்பந்தம் வியாழக்கிழமை புறக்கணித்ததாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளில் தொடரும் நெருக்கடி, நிா்ப்பந்தம் வியாழக்கிழமை புறக்கணித்ததாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களை முடிவு செய்திட போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதைக் கைவிட வேண்டும். வருவாய்த் துறையில் பணிபுரியும் அலுவலா்கள் அதீதமான மன அழுத்தத்துடன் பணிபுரிய நிா்ப்பந்தம் செய்வதை முற்றாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை (செப். 25) முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளை புறக்கணித்துள்ளோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DINAMANI வார ராசிபலன்! | Nov 23 முதல் 29 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

நவ. 23-ல் திருமணம்..! விடியோ வெளியிட்டு உறுதிசெய்த ஸ்மிருதி மந்தனா.!

மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாநாட்டு அரங்கில் தீ விபத்து! பலர் காயம்!

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா பயணம்!

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

SCROLL FOR NEXT