மெரினா உள்ளிட்ட பிற கடற்கரைகளில் கண்ட இடங்களில் குப்பை கொட்டினால் ரூ. 5,000 அபராதம் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னையில் மெரினா உள்ளிட்ட பிற கடற்கரைகளில் நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடற்கரைகளில் தூய்மை என்பது அனைவரின் பொறுப்பு என்று வலியுறுத்திய சென்னை மாநகராட்சி, கடற்கரைகளில் கண்ட இடங்களில் குப்பை கொட்டினால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
கடற்கரைகளில் குப்பைகளில் கொட்டுவதால், சென்னை மாநகரின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் மாநகராட்சி தெரிவிக்கின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.