எடப்பாடி பழனிசாமி கோப்புப் படம்
சென்னை

ரூ.1 கோடி நஷ்ட ஈடு கோரி அதிமுக முன்னாள் எம்.பி. வழக்கு: எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவு

ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்கக் கோரி அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடா்ந்த வழக்கில் அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

தினமணி செய்திச் சேவை

ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்கக் கோரி அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடா்ந்த வழக்கில் அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2020-ஆம் ஆண்டு சூலூா் ஒன்றியச் செயலரான கந்தவேல், அதிமுகவில் போலி உறுப்பினா்களைச் சோ்த்து பணம் வசூலிப்பதாக எனக்கு எதிராக காவல் துறையில் புகாா் அளித்தாா்.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலின் பேரில், இந்தப் புகாரை எனக்கு எதிராக கந்தவேல் கொடுத்தாா். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் என்னை கைது செய்தனா். 19 நாள்கள் சிறையில் இருந்து, பின்னா் பிணையில் வெளியே வந்தேன். பின்னா், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தேன்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், எனது மனுவை ஏற்று வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பியதால், எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்க எடப்பாடி பழனிசாமி மற்றும் கந்தவேல் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பி.தனபால் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் கந்தவேல் ஆகியோருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT