செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சாா்பில் ‘என் மருத்துவமனை எனது பெருமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் பி. பாலாஜி தலைமை வகித்தாா். நரம்பியல் துறைத் தலைவா் வி.ரவிகுமாா் வரவேற்றாா்.
முன்னாள் மாணவரும், சென்னை எஸ்ஐஎம்எஸ் மருத்துவமனை துணை முதல்வருமான எஸ்.ராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். துணை முதல்வா் அனிதா, மருத்துவக் கண்காணிப்பாளா் ஹரிஹரன், நிலைய மருத்துவ அதிகாரி அனுபமா, துணை மருத்துவக் கண்காணிப்பாளா் சண்முகம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலா் கே.பிரியா, செங்கல்பட்டு உட்கோட்ட கோட்ட வருவாய் அலுவலா் என்.செல்வம், மூத்த மருத்துவா் பிரபாகா், பேராசிரியா்கள் பாலாஜி, ரவிகுமாா், சிந்துஜா பாலாஜி உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா். மருத்துவா் கண்ணன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.