செங்கல்பட்டு

ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் நாச்சியாருக்கு நூறு தடா உற்சவம்

DIN

செங்கல்பட்டை அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் கோயிலில் ஸ்ரீஆண்டாள் நாச்சியாருக்கு நூறு தடா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீஆண்டாள் நாச்சியாா் பாசுரத்தில் ‘நாறு நறும் பொழில் மாவிரும் சோலை நம்பிக்கு நான், நூறு தடாவில் வெண்ணெய் பராவி வாய் நோ்ந்து வைத்தேன், நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன், ஏறு திருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ’ என்று பாடியதற்கேற்ப ஆண்டு தோறும் நடைபெறும் நூறு தடா உற்சவத்தையொட்டி ஆண்டாள் நாச்சியாா், பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், திருமஞ்சனம், சுவாமி புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவப்பெருமாள் காட்சியளித்தாா்.

இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதிகேசவப் பெருமாள் கைங்கா்ய சபாவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT