முகப்பு
செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் கொளுத்தும் வெயிலில் மழை பெய்ததால் தரையிலிருந்து எழுந்த புகை

சர்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் சனிக்கிழமை அதிக வெப்பம் நிலவி வந்த நிலையில், திடீரென மழை பெய்ததன் காரணமாக தரையிலிருந்து வெப்பம் புகையாக வெளியேறியது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:

சர்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் சனிக்கிழமை அதிக வெப்பம் நிலவி வந்த நிலையில், திடீரென மழை பெய்ததன் காரணமாக தரையிலிருந்து வெப்பம் புகையாக வெளியேறியது. 

பல்லவ மன்னர்களின் சிற்பக்கலைக்கு புகழ் பெற்ற மாமல்லபுரம் நகரம் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது. இன்று காலை முதலே அங்கு அதிக வெப்பம் காணப்பட்டது. சென்னையில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், மாமல்லபுரத்திலும் மதிய வேளையில் திடீரென மழை பெய்தது. இதன் காரணமாக தரையிலிருந்து வெப்பம் புகையாக வெளியேறியது. 

இதனைக் கண்டு பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் வியப்பும் ஆச்சரியமும் அடைந்தனர். வெப்பம் நிலவும்போது, திடீரென மழை பெய்தால் தரையிலிருந்து புகை எழுவது வழக்கம் என்றாலும், அதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் அதிர்ச்சியும் அடைந்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments