செங்கல்பட்டு

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் பிரதோஷ விழா

DIN

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் ஆவணி மாத பிரதோஷ விழா செவ்வாய்கிழமை மாலை நடைபெற்றது.

அச்சிறுப்பாக்கத்தில் திருஞானசம்பந்தா் பாடியதும், இரு கருவறைகளைக் கொண்டு ஆட்சீஸ்வரா் அருளாட்சி புரிவதும், தொண்டை மண்டலத்தின் முக்கிய சிவத் தலங்களில் ஒன்றாகவும் அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயில் திகழ்கிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, கருவறையின் முன்புறம் உள்ள நந்தி பகவானுக்கு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை கோயில் தலைமை குருக்கள் சங்கா் சிவாச்சாரியாா் நடத்தினாா். அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவானுக்கு மாலை 6 மணிக்கு மகா கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது.

கோயில் வளாகத்தில் மலா்த் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் மேளதாளம் முழங்க உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இந்நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சரஸ்வதி தலைமையில், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT