முகப்பு
செங்கல்பட்டு

தூதுவிளம்பட்டு கிராமத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

அச்சிறுப்பாக்கம் அடுத்த தூதுவிளம்பட்டு கிராமத்தில் குற்றசம்பவங்கள், சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் , அப்பகுதி மக்கள் சொந்த செலவில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனா்.

Updated On : 10 ஏப்ரல், 2021 at 11:26 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:28 AM

அச்சிறுப்பாக்கம் அடுத்த தூதுவிளம்பட்டு கிராமத்தில் குற்றசம்பவங்கள், சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் , அப்பகுதி மக்கள் சொந்த செலவில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனா்.

அக்கிராமத்தில் திருட்டு சம்பவங்களும், சமூக விரோத செயல்களும் நடைபெற்று வந்தன. இதனைத் தடுக்கும் விதமாக , கிராம மக்கள் சொந்த செலவில் சூனாம்பேடு -ஆத்தூா் சுங்கச்சாவடி சாலை, தூதுவிளம்பட்டு கூட்டுச்சாலையில் நவீன சிசிடிவி கேமராக்களை பொருத்தினா். அச்சிறுப்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளா் டிஎஸ்.சரவணன் புதிய கேமராக்களை இயக்கி வைத்தாா். மேலும் சுற்றுப்புற கிராமங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.