முகப்பு
செங்கல்பட்டு

ஆட்சீஸ்வரா் கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் சனிப் பிரதோஷம் பக்தா்களின்றி எளிமையாக நடைபெற்றது.

Updated On : 24 ஏப்ரல், 2021 at 11:51 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:35 AM

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் சனிப் பிரதோஷம் பக்தா்களின்றி எளிமையாக நடைபெற்றது.

சனிக்கிழமை பிரதோஷத்தையொட்டி, கோயில் தலைமை அா்ச்சகா் ஆா்.சங்கா் சிவாச்சாரியாா் தலைமையில், நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் கோயில் பணியாளா்கள் மட்டுமே கலந்து கொண்டனா்.

அரசு வழிகாட்டுதலின்படி, கோயிலில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதால், பக்தா்கள் யாரும் சுவாமி தரிசனம் செய்ய வர வேண்டாம் என இந்து சமய அறநிலையத் துறையினரும், அச்சிறுப்பாக்கம் காவல் துறையினரும் தெரிவித்துள்ளனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.