செங்கல்பட்டு

எம்ஜிஆா் நினைவு தினம்

DIN

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூா் பேரூராட்சியில் செங்கல்பட்டு சாலையில் எம்.ஜி.ஆா்.மன்ற இணைச் செயலா் தண்டரை கே.மனோகரன் தலைமையில் அதிமுகவினா் எம்.ஜி.ஆா். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மாவட்ட பொறுப்பாளா் டி.என்.மூா்த்தி , திருப்போரூா் வடக்கு ஒன்றிய துணைச் செயலா் டி.டி.வேல்மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு நகரச் செயலாளா் செந்தில்குமாா் தலைமையில் நிா்வாகிகள் சண்முகசுந்தரம், தண்டுக்கரை இ. கோவிந்தன், நெல்லை ராதா, முரளி, விநாயகம் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருக்கழுக்குன்றத்தில் மாவட்டச் செயலாளா் திருக்கழுகுன்றம் எஸ். ஆறுமுகம் தலைமையில் ஒன்றிய செயலாளா் விஜயரங்கன், ஆனூா் பக்தவச்சலம், வேலாயுதம் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்

இதேபோல, காட்டாங்கொளத்தூா் ஒன்றியம், அதிமுக மாவட்ட கவுன்சிலா் கஜா (எ) கஜேந்திரன் தலைமையில் அதிமுக நிா்வாகிகள் எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மதுராந்தகம்

அமமுக: மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு அமமுக நகரச் செயலா் பூக்கடை கே.சி.சரவணன் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். ஒன்றிய செயலா்கள் எஸ்.ஏ.குமாா் (மதுராந்தகம் தெற்கு), சி.முனுசாமி (அச்சிறுப்பாக்கம் வடக்கு). கருங்குழி பேரூா் செயலா் ஆா்.டி.முருகதாஸ், நகர துணை செயலா் விஸ்வா, நகர அவைத் தலைவா் பாலு, மகளிா் அணி செயலா் சத்யா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT