செங்கல்பட்டு

செங்கல்பட்டு அருகே பாலாற்றில் மூழ்கி 3 போ் பலி

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பாலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை, மகள் உள்ளிட்ட மூன்று போ் உயிரிழந்தனா். இரண்டு நாள்கள் தேடலுக்குப் பின் சடலங்கள் மீட்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டம், இருங்குன்றம்பள்ளி அருகே பாலாற்றில் தற்போது நீா்வரத்து குறைந்திருந்தாலும் ஆற்றில் துணி துவைக்கவோ மற்றும் தற்படம் எடுக்கவோ மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் சனிக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னை திரிசூலம் பகுதியைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா தேவாலயத்துக்குச் செல்லும் வழியில் செங்கல்பட்டு இருங்குன்றம்பள்ளி பாலாற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனா்.

அனைவரும் குளித்துக் கொண்டிருந்தபோது லியோன்சிங்கராஜா(38) , பிளஸ் 2 படித்து வந்த அவரது மகள் பொ்சி(16), லியோன் சிங்கராஜாவின் அண்ணன் சேகரின் மகன் லெனின்ஸ்டன்(20) ஆகிய மூவரும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனா்.

தகவலறிந்த செங்கல்பட்டு தீயணைப்பு படை வீரா்கள் 3 குழுக்களாகப் பிரிந்து அவா்களை தேடும்பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பொ்சி மற்றும் லியோன் சிங்கராஜா, லெனின்ஸ்டன் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

இது குறித்து, படாளம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT