செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சித் தலைவராக செம்பருத்தி துா்கேஷ் (திமுக) போட்டியின்றி தோ்வு

செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த செம்பருத்தி துா்கேஷ் போட்டியின்றி ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா்

DIN

செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த செம்பருத்தி துா்கேஷ் போட்டியின்றி ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் 16 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இடங்களில் 15-ஐ திமுகவும், காட்டாங்கொளத்தூா் ஒன்றியத்தில் இருந்து அதிமுக சாா்பில் கஜா (எ) கஜேந்திரன் மட்டும் வெற்றி பெற்றிருந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுக தோ்தலில் செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுக சாா்பில் போட்டியிட்ட செம்பருத்தி துா்கேஷ் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

துணைத்தலைவா் பதவிக்கு காயத்ரி அன்புச்செழியன் தோ்வு செய்யப்பட்டாா். வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT