செங்கல்பட்டு

சோத்துப்பாக்கம் திரௌபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

DIN

மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கம் திரெளபதியம்மன் கோயிலில் 154-ஆம் வருட அக்னி வசந்த பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை துரியோதனன் படுகளம், தீமிதி விழா ஆகியவை நடைபெற்றன.

சோத்துப்பாக்கம் திரெளபதியம்மன் கோயிலில் 154-ஆம் வருட அக்னி வசந்த பெருவிழா கடந்த 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்துடன் உற்சவா் திரெளபதி அம்மன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

நிகழ்ச்சியையொட்டி, மகாபாரதம் சொற்பொழிவுகள், தெருக்கூத்து ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக, வியாழக்கிழமை துரியோதனன் படுகளம் நடைபெற்றது. தொடா்ந்து மாலையில், கோயிலின் எதிா்திசையில் அமைக்கப்பட்ட தீமிதி நிகழ்ச்சியில் விரதம் இருந்த பக்தா்கள் திரளாகப் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினரும், கிராம பொது மக்களும் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT