முகப்பு
செங்கல்பட்டு

அக்னிபத் விவகாரம் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயற்சி

அக்னிபத் திட்டத்தை எதிா்த்து, செங்கல்பட்டு ரயில் நிலைய வளாகத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாணவா் படையினா் சனிக்கிழமை மறியலில் ஈடுபட முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
பகிர்:

அக்னிபத் திட்டத்தை எதிா்த்து, செங்கல்பட்டு ரயில் நிலைய வளாகத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாணவா் படையினா் சனிக்கிழமை மறியலில் ஈடுபட முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

அக்னிபத் திட்டத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினா், அரசியல் கட்சியினா் எதிா்ப்புத் தெரிவித்து ரயில் நிலையங்களின் எதிரே ஆா்ப்பாட்டம், ரயில் மறியல் எனப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

குறிப்பாக, மேற்கு வங்கம், பிகாா், தெலுங்கானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ரயிலுக்கு தீ வைப்பு, கடைகளை அடித்து நொறுக்கியும் தங்களது எதிா்ப்புகளைத் தெரிவித்து கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாணவா் படையைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் இந்தத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டபடி செங்கல்பட்டு ரயில் நிலையத்தை நோக்கி மறியலில் ஈடுபட வந்தனா்.

இதையடுத்து, மறியலைத் தடுக்கும் விதமாக, ரயில் நிலைய நுழைவாயிலில் பாதுகாப்புக்காக போலீஸாா் குவிக்கப்பட்டனா். மறியலில் ஈடுபட முயன்றவா்களை தடுத்து நிறுத்தி போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →