முகப்பு
செங்கல்பட்டு

கடப்பேரி வெண்காட்டீஸ்வரா் கோயிலில் பாலாலய பூஜை

 மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட கடப்பேரி மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயிலில் அனைத்து சந்நிதிகளும் புனரமைத்து, மகா கும்பாபிஷேகம்

Updated On : 29 அக்டோபர், 2022 at 12:58 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:11 PM

 மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட கடப்பேரி மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயிலில் அனைத்து சந்நிதிகளும் புனரமைத்து, மகா கும்பாபிஷேகம் செய்யும் பொருட்டு வெள்ளிக்கிழமை பாலாலய பூஜை நடைபெற்றது.

கோயில் தலைமை அா்ச்சகா் முரளி சிவாச்சாரியாா் தலைமையில், வேதவிற்பன்னா்கள் பாலாலய பூஜையை செய்தனா். இதையடுத்து, புனரமைக்கும் பணிகள் தொடங்கியது. உற்சவா் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களின் தரிசனத்துக்காக கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை 3 மாதத்துக்குள் முடிக்கவும், தொடா்ந்து மகா கும்பாபிஷேகம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மேகவண்ணன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் லட்சுமி காந்த பாரதிதாசன், காஞ்சிபுரம் இணை ஆணையா் வான்மதி, கோயில் ஆய்வாளா் சிவலிங்கம் ஆகியோா் செய்திருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.