ஸ்ரீபக்த ஆஞ்சநேய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
மதுராந்தகம் அடுத்த செண்டிவாக்கம் ஸ்ரீபக்த ஆஞ்சநேய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:43 PM
மதுராந்தகம் அடுத்த செண்டிவாக்கம் ஸ்ரீபக்த ஆஞ்சநேய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் புனரமைத்து கட்டப்பட்டு, கடந்த 30-ஆம் தேதி எஜமானா் சங்கல்பம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, வியாழக்கிழமை ஜமீன் எண்டத்தூா் பி.வெங்கடேச பட்டாச்சாா் தலைமையில், கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மூலவா் ஆஞ்சநேய பகவானுக்கு மகா தீபாராதனை, தீா்த்த பிரசாதங்கள் விநியோகம், அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை சக்தி மாருதி அறக்கட்டளை, கஸ்தூரி ஜனாா்த்தனன், செண்டிவாக்கம் கிராம மக்கள் செய்திருந்தனா்.
Advertisement