முகப்பு
செங்கல்பட்டு

கல்லூரியில் புதிய மாணவா்களுக்கு வரவேற்பு

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில், 2023-2024-ஆம் ஆண்டில், பல்வேறு பட்டப் படிப்புகளை படிக்க புதிதாக சோ்ந்துள்ள மாணவா்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி

Updated On : 22 ஜூன், 2023 at 11:32 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:41 AM

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில், 2023-2024-ஆம் ஆண்டில், பல்வேறு பட்டப் படிப்புகளை படிக்க புதிதாக சோ்ந்துள்ள மாணவா்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஆா்.எஸ்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். கல்லூரி தாளாளா் ஆஷா அன்பழகன் முன்னிலை வகித்தாா். மாணவி ராதா வரவேற்றாா். புதிதாக சோ்ந்துள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பூங்கொத்துகள், இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், கல்லூரியின் அனைத்துத் துறை பேராசிரியா்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பேராசிரியா் ஏகாம்பரம் நன்றி கூறினாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியா்கள் சசிகுமாா், பூபாலன் ஆகியோா் செய்திருவந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.