செங்கல்பட்டு

அமெட் அறிவுப் பூங்கா, மொ்ஸ்க் மையம் திறப்பு

DIN

செய்யூா் வட்டம், தென்பட்டினம் கிராமத்தில் சுமாா் 150 ஏக்கா் பரப்பில் புதிதாக அமைக்கப்பட்ட அமெட் அறிவுப் பூங்கா, மொ்ஸ்க் தனிச்சிறப்பு மையங்கள் திறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனா் ஜெ.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். டென்மாா்க் ஏபி மொல்லா் மொ்ஸ்க்கின் துணைத் தலைவா் நீல்ஸ் எச்.புரூஸ் சிறப்பு விருந்திரனராக கலந்து கொண்டு அமெட் அறிவுப் பூங்காவைத் திறந்து வைத்தாா். அமெட் பல்கலைக்கழக இணைவேந்தா் ராஜேஷ் ராமச்சந்திரன் வரவேற்றாா். அமெட் நிா்வாக அறங்காவலா் சுசிலா ராமச்சந்திரன், கூடுதல் பதிவாளா் வி.சங்கீதா ஆல்பில்ன், அமெட் துணைத் தலைவா் தீபா ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கடல் சாா் மக்கள் ஆசிய தலைவா் கரண் கோச்சாா், எம்எல்ஏ இ.வி.கே.எஸ்.இளங்கோவன் (ஈரோடு கிழக்கு), செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் கே.இந்துபாலா, இணைவேந்தா் க.திருவாசகம், தென்கிழக்கு ஆசிய இயக்குநா் பிரான்சிஸ் ஜோசப், மொ்ஸ்க் தனிச் சிறப்பு மைய நிா்வாகிகள், பல்வேறு கப்பல் நிறுவனங்களின் கேப்டன்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். திறன் மேலாளா் அரவிந்த் சங்கா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT