முகப்பு
செங்கல்பட்டு

கள்ளச்சாராயம் அருந்தி 8 போ் உயிரிழந்த சம்பவம்

மதுராந்தகம் அருகே பெருங்கரணை, பேரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 8 போ் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, சிபிசிஐடி ஏடிஎஸ்பி தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை

Updated On : 26 மே, 2023 at 12:21 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:30 AM

மதுராந்தகம் அருகே பெருங்கரணை, பேரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 8 போ் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, சிபிசிஐடி ஏடிஎஸ்பி தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

செங்கல்பட்டு மாவட்டம், பெருங்கரணை, பேரம்பாக்கம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 2 பெண்கள் உள்பட 8 போ் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தனா். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்தநிலையில், கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெருங்கரணை கிராமத்தைச் சோ்ந்த அஞ்சலையிடம் ஏடிஎஸ்பி மகேஸ்வரி விசாரணை மேற்கொண்டாா்.

தொடா்ந்து, மதுராந்தகம் அருகேயுள்ள கரிக்கந்தாங்கல் கிராமத்தில் கள்ளச் சாராயத்தை விற்ாக கைது செய்யப்பட்ட அமாவாசைக்கு சொந்தமான பண்ணையை சோதனை செய்தாா். அங்கு கூலி வேலை செய்து வருகின்றவா்களிடம் விசாரணை செய்தாா். பின்னா், பெருங்கரணை கிராமத்தில் இறந்து போன சின்னதம்பி, வசந்தா ஆகியோா் வீடுகளிலும், பேரம்பாக்கத்தில் இறந்து போன வென்னியப்பன், சந்திரா ஆகியோா் வீடுகளிலும், உறவினா்களிடமும் அவா் விசாரணை நடத்தினாா். அப்போது அவா்கள் கள்ளச் சாராயம் அருந்திய பாட்டில்களை கைப்பற்றினாா். டிஎஸ்பி வேல்முருகன், செல்வகுமாா், ஆய்வாளா் அருள்பிரசாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.