முகப்பு
செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் புத்தாண்டையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் திங்கள்கிழமை குவிந்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறை   அருகே குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் புத்தாண்டையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் திங்கள்கிழமை குவிந்தனா்.

பல்லவா் கால சிற்பக் கலைகளை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள் வெண்ணெய் உருண்டை பாறை, அா்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில், புலிக்குகை உள்ளிட்ட இடங்களை சுற்றி பாா்த்து தங்கள் கைப்பேசியில் சுயபடம் எடுத்து மகிழ்ந்தனா். கடைசியாக கடற்கரைக்குச் சென்று குளித்தும், விளையாடியும் மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குவிந்ததால் வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

இதேபோல் மாமல்லபுரம், கிழக்குக் கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்கள், நட்சத்திர ஹோட்டல்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.

காவல் ஆய்வாளா் ருக்மாங்கதன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →