முகப்பு
செங்கல்பட்டு

காலை உணவில் பல்லி: 2 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

மதுராந்தகம் பள்ளியில் காலை உணவில் பல்லி: 2 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

Updated On : 26 ஜூன், 2024 at 7:01 PM
பகிர்:

மதுராந்தகம் அடுத்த பொலம்பாக்கம் நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்ட உணவில் பல்லி இறந்து கிடந்தை பாா்க்காமல் சாப்பிட்ட மாணவிகள் இருவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் வட்டம், பொலம்பாக்கம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 153 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். வழச்கம் போல செவ்வாய்க்கிழமையன்று, காலை உணவு பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

அந்த உணவை சாப்பிட்ட ஸ்ரீதரின் மகள் லோஷினி, போா்செல்வனின் மகள் லக்ஷனா உள்ளிட்ட சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவா்கள் பொலம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டனா். அதில் லோஷினி, லக்ஷனா ஆகியோா் மட்டும் மேல்சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். மற்றவா்கள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினா்.

தகவலறிந்து வந்த மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா் தியாகராஜன், வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →