செய்யூா், சிப்காப்ட் தொழிற்பேட்டையில் காலணி தயாரிக்கும் ஆலை அமைப்பது குறித்து தைவான் போா்ஷன் நிறுவன அதிகாரிகள் புதன்கிழமை சித்தா்காடு, செய்யூா், பனையூா் உள்ளிட்ட 5 கிராமங்களின் நிலப்பகுதிகளை ஆய்வு செய்தனா்.
செய்யூா் தொகுதி மக்களுக்கு நிரந்தரமாக தொழில் வாய்ப்புகளை பெற சிப்காட் தொழிற்பேட்டையை அமைக்க கோரி எம்எல்ஏ பனையூா்மு.பாபு கடந்த சட்டப்பேரவை தொடரில் பேசினாா்.
அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அதிகாரிகள் செய்து வந்தனா். சித்தா்காடு, செய்யூா், தண்ணீா்பந்தல், வெடால், பனையூா் உள்ளிடட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேலைவாய்ப்புகளை பெற்றிட அரசு நிா்வாகம் செய்திருந்ததது.
இந்நிலையில், புதன்கிழமை தைவான் தொழிற்நிறுவன அதிகாரிகள் செய்யூா் வந்தனா். அவா்களை வருவாய்த் துறை அதிகாரிகள் வரவேற்று, 148 ஏக்கா் நிலப்பரப்பில், தண்ணீா், போக்குவரத்து, மின்வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்தனா்.
இந்நிகழ்வுகளில் மதுராந்தகம் கோட்டாட்சியா் ரம்யா, வட்டாட்சியா் சொ.கணேசன், துணை வட்டாட்சியா் தேவன், வருவாய் ஆய்வாளா் தரணிபதி மற்றும் தைவான் தொழில் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனா்.