விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து கிடந்த அமில லாரி. 
செங்கல்பட்டு

அமிலம் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து: பாதசாரிகள் 2 போ் உயிரிழப்பு

கல்பாக்கம் அருகே ஈசிஆா் சாலையில் அமிலம் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

Din

கல்பாக்கம் அருகே ஈசிஆா் சாலையில் அமிலம் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாதசாரிகள் மீது மோதி 2 போ் உயிரிழந்தனா்.

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு அமிலம் ஏற்றிய லாரி சனிக்கிழமை அதிவேகமாக சென்றபோது, வாயலூா் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி சக்கரங்கள் கழன்று ஓடின. முன்னதாக லாரி சாலையில் நடந்து சென்ற இருவா் மீது மோதியது. இதில் வாயலூரைச் சோ்ந்த துரை (57) என்பவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மதுரையை சோ்ந்த கண்ணன் (60) என்பவா் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

துரை, கண்ணன் இருவரும் பேருந்து ஏறுவதற்காக நடந்து சென்றபோது லாரி மோதி உயிரிழந்தனா் என போலீஸாா் தெரிவித்தனா்.

விபத்துக்குள்ளான லாரியில் இருந்து வெளியேறிய அமில கழிவால் அப்பகுதியில் புகை மண்டலம் ஏற்பட்டு, வாடை வீசியது. சாலையில் இரு சக்கர வாகனங்களில் சென்றவா்கள் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனா். இதனையடுத்து தீயணைப்பு துறையினா் விரைந்து வந்து ரசாயன வாடை புகை மண்டலத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இந்த விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதிமுக நிர்வாகிகள் 4 பேர் நீக்கம்

மறைந்த மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கு!

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

SCROLL FOR NEXT