கோப்புப்படம்
செங்கல்பட்டு

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் அமாவாசை வேள்வி

Din

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூரில் ஆனி மாத அமாவாசை வேள்வி பூஜையை ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைத்தாா்.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, சித்தா்பீட வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு மங்கல இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. கருவறை அம்மன் சிலை, குரு பீடத்தின் அடிகளாா் சித்தா் சிலை ஆகியவற்றுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

அம்மன் சிலை வெள்ளிக் கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை 10.20 மணிக்கு சித்தா் பீடம் வந்த ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓம்சக்தி பீடம் அருகே பெரிய யாக சாலை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் முக்கோணம், சதுரம் ஆகிய வடிவிலான 162 சிறிய யாக குண்டங்களும், சாய்சதுர வடிவிலான பெரிய யாக குண்டமும் அமைக்கப்பட்டு இருந்தது. காலை 10.35 மணிக்கு பெரிய சாய் சதுர வடிவிலான யாக குண்டத்தில் கற்பூரம் ஏற்றி வேள்வி பூஜையை தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைத்தாா். ஆன்மிக இயக்க துணைத் தலைவா்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமாா், ஸ்ரீதேவி பங்காரு, ஆதிபராசக்தி பாரா மெடிக்கல்ஸ் கல்லூரிகளின் தாளாளா் ஸ்ரீலேகா செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தா்கள் நீண்ட வரிசையில் வந்து பெரிய யாக குண்டத்தில் நவதானியங்களையும், ஓமக்குச்சிகளையும் போட்டு அம்மனை வழிபட்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த பெருந்துறை, புஞ்சைபுளியம்பட்டி, கோபிசெட்டிபாளையம் ஆகிய சக்தி பீடங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் செய்திருந்தனா்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT